1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2022 (15:52 IST)

ஷாரூக்கானும் தப்பல.. பதானை புறக்கணிக்க ட்ரெண்டிங் செய்யும் நெட்டிசன்கள்!

pathan -shah rukh khan
ஷாரூக்கானின் ‘பதான்’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரெண்டிங் ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

இந்தி இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் ‘பதான்’. இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜனவரி 2023ல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

கடந்த சில காலமாக பாலிவுட்டில் வெளியாகும் பல படங்களை பாலிவுட் ரசிகர்களே பல்வேறு காரணங்களுக்காக புறக்கணித்து ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த லிஸ்ட்டில் பதானும் இணைந்துள்ளது. மேலும் இதற்கு முன்னர் இதுபோல் ட்விட்டரில் Boycott ஹேஷ்டேகில் சிக்கிய பாலிவுட் படங்களும் சுமார் வெற்றியையோ அல்லது தோல்வியையொ பெற்றிருப்பதால் இந்த ட்ரெண்டிங் பதானின் வெற்றியை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Edit By Prasanth.K