திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (15:06 IST)

’புஷ்பா 2’ படத்தின் பூஜை புகைப்படங்கள்: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மிஸ்ஸிங்!

pushpaa2
’புஷ்பா 2’ படத்தின் பூஜை புகைப்படங்கள்: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மிஸ்ஸிங்!
 அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
 
இந்த பூஜையில் இயக்குனர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
pushpaa2a
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை சுகுமார் இயக்க உள்ளார் என்பதும் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அல்லு அர்ஜூன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவர் நாடு திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய பூஜையில் அல்லு அர்ஜூன் , ராஷ்மிகா மந்தனா இருவருமே மிஸ்ஸிங் என்பதும் குறிப்பிடத்தக்கது.