வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (11:12 IST)

டாக்டர் பட்டம் பெற்றார் சிம்பு: வைரல் புகைப்படம்!

டாக்டர் பட்டம் பெற்றார் சிம்பு: வைரல் புகைப்படம்!
நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் ஜனவரி 11ஆம் தேதி டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக வெளிவந்த செய்தி ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் அவர்கள் டாக்டர் பட்டம் அளித்து உள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிபிடத்தக்கது. 
 
6 மாத குழந்தை முதல் 39 வயது வரை நடிகராக மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளர் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர் என பல்வேறு அவதாரங்களில் தமிழ் திரையுலகில் பணியாற்றிய சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார் 
 
அவருடன் சேர்ந்த தொழிலதிபர் விஜி சந்தோசம் மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் ஆகியோர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் நடந்த பட்டமளிப்பு விழாவில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது