வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (19:43 IST)

சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் பல்கலைக்கழகம்!

நடிகர் சிம்பு 6 மாத குழந்தை முதல் தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது திரையுலக சாதனையை பாராட்டி வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க உள்ளது 
 
வரும் 11ம் தேதி டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் இந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு அவதாரங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்து வரும் நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவிக்கின்றது என்பது  குறிப்பிடத்தக்கது
 
சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.