புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (13:31 IST)

அஜித் படத்திற்கு அதிக கட்டணம்… 28 தியேட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்

அஜித்தின் ‘விவேகம்’ படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்த 28 தியேட்டர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்.



 
முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும்போது தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்னையைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ‘டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு சிறப்புக்குழு ஒன்று அமைக்க வேண்டும்’ என இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். ஆனால், இதுவரை சிறப்புக்குழு அமைக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் வெளியான அஜித்தின் ‘விவேகம்’ படத்திற்கு, 500 முதல் 1000 ரூபாய் வரையில் எக்ஸ்ட்ராவாக விலை நிர்ணயித்து டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இதை, ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் தேவராஜ். இதில் சம்பந்தப்பட்ட 28 தியேட்டர்களும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.