1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (15:33 IST)

அஜித் சாரின் உழைப்பிற்காகவே படத்தை பார்க்கலாம்: பிரபல நடிகர் கருத்து

'விவேகம்' படம் வெளிவந்து பல கலவையான விமர்சனங்களை சந்தித்தது. உலகம் முழுவதும் வெளிவந்த இந்தப் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வசூல் அமோகமாக உள்ளது.

 
'விவேகம்' படத்தின் வசூல் எந்தப் படமும் செய்யாத சாதனையாக முதல் வாரத்தில் ரூ. 5.75 கோடியைச் சென்னையில் மட்டும் வசூலித்துள்ளது. படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துடன் சேர்ந்து முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் அருண் விஜய் சமீபத்தில்  விவேகம் படத்தைப் பார்த்துவிட்டு, தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அஜித் சாரின்  அற்புதமான உழைப்பு படத்தில் நன்றாக தெரிகிறது. அவர் நடிப்பில் மிகச்சிறப்பான இடத்தில் இருக்கிறார். அவரது நடிப்புக்காகவே  'விவேகம்' படம் பார்ப்போம்' என பதிவிட்டுள்ளார்.