புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:59 IST)

அதிகரிக்கும் கதாநாயகி மையத் திரைப்படங்கள்… பின்னணி இதுதானாம்!

தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா மட்டுமே இதுபோல படங்களில் நடித்து வந்தார். ஆனால் கொரோனா, மற்றும் ஓடிடிகளின் வருகையால் இப்போது கீர்த்தி சுரேஷ், சமந்தா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரும் இதுபோல படங்களில் நடிக்கின்றனர்.

பல தயாரிப்பாளர்களும் கதாநாயகி மையத் திரைப்படங்களை தயாரிக்க முன் வருகின்றன. இதற்கு பின்னணியில் ஒரு முக்கியமானக் காரணம் உள்ளதாம். கதாநாயகிகளை வைத்து எடுக்கும் போது பட்ஜெட் பெருமளவு குறைகிறதாம். இதனால் ஓடிடிகளில் படத்தை விற்று கணிசமான லாபத்தைப் பார்க்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். இந்நிலையில் இப்போது தமிழில் 20க்கும் மேற்பட்ட கதாநாயகி மைய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.