1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (15:16 IST)

சமந்தாவுக்கும் எனக்கும் தவறான தொடர்பு இல்லை- பிரீதம் ஜூகர்கர்

சமீபத்தில் நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில், தனக்கும் சமந்தாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஆடை வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா சமீபத்தில் விவாகரத்து செய்துகொண்டார். இவரைப் பற்றி வதந்திகள் பரவி வந்த நிலையில் ஒரு அறிக்கை வெளியிட்டு, தன் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நடிகை சமந்தாவின் கருத்துக்கு பல முன்னணி நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆடை வடிவமைப்பாளார்  பிரிதம் ஜூகல்கருடன் நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுபற்றி நாகசைதன்யா ரசிகர்கள் இணையதளத்தில் விமர்சித்து, கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
 

இதுகுறித்து பிரீதம் ஜுகல்கர் கூறியுள்ளதாவது: நடிகை சமந்தாவுக்கும் எனக்கும் எந்தத் தவறான தொடர்பும் இல்லை; எனக்கும் சமந்தாவுக்கும் உள்ள தொடர்பால்தான் சமந்தா , நாகசைதன்யாவை பிரிந்தார் என தவறான தகவல் பரப்பி வருகின்றனர். நாம் சமந்தாவை சகோதரியாகப் பார்க்கிறேன். ஆனால் நாகசைதன்யா ரசிகர்கள் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர்  எனத் தெரிவித்துள்ளார்.