1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 18 அக்டோபர் 2021 (13:19 IST)

வெப் சீரிஸில் களமிறங்கும் த்ரிஷா… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

தமிழ் சினிமாவில் பிரஷாந்த் நடித்த ஜோடி படத்தில்  சிம்ரனுக்கு தோழியாக நடித்தவர் த்ரிஷா. பின்னர் மாடலிங் செய்து வந்த அவர் சிம்பு நடித்த தம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இதையடுத்து, விஜய்யுடன் திருப்பாச்சி, கில்லி, ஆதி, குருவி, ஆறு, பீமா, மீண்டும் சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய்சேதுபதி -த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 96. இப்படத்தில் இருவரின் நடிப்பும் பேசப்பட்டது.  தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில்  திரிஷா நடித்துவருகிறார். இந்நிலையில் இப்போது அதிகளவில் உருவாகி வரும் வெப் சீரிஸ்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

தெலுங்கில் உருவாகி மற்ற மொழிகளில் டப் ஆகும், பிரிந்தா என்ற வெப் சீரிஸில் நடிக்க உள்ளார். இதற்கான பூஜை நேற்று நடந்தது. இந்த சீரிஸ் சோனி லிவ் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது.