1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:42 IST)

குவியும் பட வாய்ப்புகள்: விவகாரத்தை மறக்க புது ரூட்டில் சமந்தா!

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் தற்போது அடுத்து 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை சமந்தா. 

 
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை பேசி வந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்தா கேட்டுக்கொண்டார். 
 
ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘சகுந்தலம்’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது அடுத்து 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 
 
இதில் ஒன்று பாலிவுட் படம். இது சமந்தாவின் முதல் பாலிவுட் படமாகும். மேலும் அவர் நடிக்க உள்ள மற்ற இரண்டு படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களாக தயாராகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.