புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 ஜனவரி 2019 (06:47 IST)

அஜித் இடத்தை பிடித்த தனுஷ்

அஜித் நடித்த 'விவேகம்', விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களை அடுத்தடுத்து தயாரித்த 'சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 34வது படத்தில் தனுஷ் நடிக்க இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். இவர் தனுஷ் தயாரித்த 'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை மற்றும் 'கொடி ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்திற்கு இரட்டையர்களான விவேக்-மெர்வின் இசையமைப்பாளர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 35வது படத்தில் தனுஷ் நடிக்க இந்த படத்தை ராம்குமார் இயக்கவுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான 'ராட்சசன்' என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

தனுஷ் ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா', வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.