வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (21:40 IST)

செய்தியாளரின் கேமராவை தட்டிவிட்ட திரிஷாவின் பவுன்சர்கள்

Trisha Poster
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் ஸ்டுடியோஸ்  தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் வரும் (அக்டோபர் 19 ஆம் தேதி) இன்று  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்படம் வசூல் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படம் ரிலீஸான தியேட்டர்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் நேரடியாக சென்று படம் பார்த்து ரசிகர்களின் கருத்துகளை கேட்டறிந்தனர்.

இன்று  சென்னை ரோகிணி தியேட்டரில் லியோ படம் பார்த்துவிட்டு திரிஷா வெளியே வரும்போது, அவரைச் சூழ்ந்து கொண்ட பவுன்சர்கள் ஆக்ரோசமாக செய்தியாளரின் கேமராவை தட்டிவிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.