1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (13:49 IST)

ரைசாவா? பிந்து மாதவியா? ஹரிஷ் கல்யாண் பதில்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்குகொண்ட சினிமா பிரபலங்கள், நிகழ்ச்சிக்கு பின்னர் மேலும் பிரபலம் அடைந்துள்ளனர். அதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிந்து மாதவியும் குறிப்பிடத்தக்கவர்கள். 
 
புகழேந்தி எனும் நான் என்ற படத்தில் பிந்து மாதவி கமிட்டாகியுள்ளார். அதே போல், ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஜோடியாக புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இதற்கு பியார் பிரேமா காதல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் கூட, ஹரிஸ் கல்யாண் மற்ற்ம் பிந்து மாதவி ஒன்றாக கோவிலுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், பிந்து மாதவியுடனான உறவு குறித்து ஹரிஷ் கல்யாணிடம் கேள்வி கேட்கப்பட்டது. 
 
இதற்கு அவர், பிந்து மாஹவி, ரைசா ஆகிய இருவரு எனக்கு நல்ல தோழிகள்தான். ஆனால், நான் பிக்பாஸ் வீட்டில் பிந்து மாதவியுடந்தான் அதிக நாட்களை கடந்தேன். ரைசாவுடன் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறேன். ஆனாலும், ரைசாவைவிட பிந்து மாதவிதான் என்னுடைய நெருக்கமான தோழி என பதிலளித்துள்ளார்.