1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (13:28 IST)

‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண் கொடுத்த விளக்கம்

சிம்பு இசையில் தான் பாடிய பாடல் எப்போது வெளியாகும் என விளக்கம் அளித்துள்ளார் ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண்.
நடிகரான ஹரிஷ் கல்யாண், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அழகாகப் பாடினார். அதைப் பார்த்த சிம்பு, தான் முதன்முதலாக இசையமைத்த ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் ஒரு பாடலைப் பாடவைத்தார்.
 
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று முன் தினம் நடைபெற்றது. ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த 5 பாடல்களில், ஹரிஷ் கல்யாண் பாடல் இடம்பெறவில்லை. இதனால், ஒருவேளை ஆல்பத்தில் அந்தப் பாடலே இல்லையா என்ற சந்தேகம்  ஏற்பட்டது.
 
அந்த சந்தேகத்திற்கு, ஹரிஷ் கல்யாண் விளக்கம் அளித்துள்ளார். “நான் பாடிய டைட்டில் ட்ராக், படம் ரிலீஸாவதற்கு முன்பு  போனஸாக வெளிவரும்” என்று தெரிவித்துள்ளார்.