1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 18 நவம்பர் 2017 (11:30 IST)

ஹரிஷ் கல்யாண்-ரைசா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கும் 'பியார் பிரேமா காதல்'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியுள்ளது.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான போட்டியாளர்கள் பலருக்கும் சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் வந்துள்ளது. அதில் ஹரிஷ் மற்றும் ரைசா ஜோடியாக புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இதற்கு ’பியார் பிரேமா காதல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை இளன் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்து வருகிறார்.

 
'பாகுபலி 2' படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷ்ன்ஸ் ராஜராஜன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்(பி) லிட் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்கிறார்.
 
இந்நிலையில் படக்குழு சார்பில் 'பியார் பிரேமா காதல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.