வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (11:04 IST)

இயக்குனர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறு கோடி வானவில்’… நேரடி ஓடிடி ரிலிஸா?

பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நாயகி சித்தி இட்னானி நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு நூறு கோடி வானவில் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சித்துகுமார் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங் பணி முடிந்து விட்டதாகவும் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

நாளை படத்தின் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.