திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (17:13 IST)

’’கடுமையான உழைப்பு’’....ஆர்யாவை மனதாரப் பாராட்டிய முன்னணி நடிகர்...

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான காலா திரைப்படத்துக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் ’’சார்பேட்டா பரம்பரை’’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.  இதில் ஆர்யா பாக்ஸராக நடித்து உள்ளார். இப்படத்திற்காக அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

கொரொனா கால ஊரடங்கு சில தளர்களுடன் அமலில் உள்ள நிலையில். திரைப்படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்து.

இப்படத்தின் சென்னையை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்று பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார்.
 

அதில், ஆர்யாவின் 30 வது படமான ’’சார்பேட்டா பரம்பரை’’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்  வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் சர்பேட்டா போஸ்டரைப் பகிர்ந்து உங்கள் கடின உழைப்பு  பலருக்கு இன்ஸ்பிரேசனாக உள்ளது எனத் தெரிவித்து ஆர்யாவைப் பாராட்டியுள்ளார்.

அதேபோல் ஆர்.ஜே.பாலாஜி சர்பேட்டா பரம்பரை படக்குழுவினரைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.