செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (15:19 IST)

அழகு தேவதை சமந்தாவுக்கு இன்று பிறந்தநாள்!

புன்னகை தவழும் பவ்யமான குழந்தை முகம்! எப்போதும் ஒவ்வொரு முகங்களிலும் எதையோ தேடும் அழகிய கண்கள்! நொடிக்கு ஒரு முக பாவனை காட்டும் அழகு பதுமை  இதுதான் சமந்தா. தமிழ் ரசிகர்களின் மனதில் ‘பாணா காத்தாடி’ விட்டு போட்டியின்றி பறந்துகொண்டிருக்கும் அழகு மயில். 


 
சினிமாவில் அறிமுகமாகி  கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் தான் ஆகிறது! அதற்குள்  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் இவர் இதுவரை 41  படங்களுக்கு மேல் நடித்து விட்டு பெரும் புகழ் பெற்றுள்ளார்.
 
சென்னை பெண்ணாக கண்டறியப்பட்டு முன்னணி கதாநாயகியாக வலம் வரும்  நடிகை சமந்தா, கல்லூாி படிக்கும் போதே மாடலிங் துறைக்குள் நுழைந்து அதிகமான விளம்பரங்களில் நடித்தாா். பின்னா் ஒளிப்பதிவாளா் ரவி வா்மன் இயக்கிய மாஸ்கோவின் காவிாி என்ற படத்தின் மூலம் நாயகியாக வெளிப்பட்டாா். 


 
தமிழில் ‘கத்தி’ படத்தில் விஜய்யுடன் ஜோடி போட்டவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரமுடன் ‘பத்து எண்றதுக்குள்ள’ என்ற படத்திலும், சூர்யாவுடன், விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24’ படத்திலும் நடித்து வருகிறார். அத்துடன் பல தெலுங்கு படங்களையும் கையில் வைத்துக் கொண்டு தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடைத்தை பிடித்துக் கொண்டுள்ளார் சமந்தா. 
 
முன்னணி ஹீரோக்களாகட்டும்.. அல்லது அரசியலாகட்டும் யாராக இருந்தாலும் தன் மனதில் பட்டதை பளிச்சென்று தைரியமாக சொல்லும் தைரியசாலி நடிகை என்றால் அது சமந்தா ஒருவர்தான். கவர்ச்சியை நம்பாமல் தனது நடிப்பின் மூலம் மட்டுமே முன்னேறி இந்த அளவிற்கு புகழ்பெற்றுள்ளார்.


 
பிரபல தெலுங்கு  நடிகர்  நாக சைத்தான்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபாில் திருமணம் செய்து கொண்டாா். பொதுவாக திருமணத்திற்கு பின்னா் நடிககைகள் முடங்கிவிடும் நிலையில், முன்பை விட அதிக படங்களில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் சமந்தா. 


 
தென்னிந்திய சினிமா ரசிகர்களின் அதிலும் குறிப்பாக இளைஞர்களின் கனவு தேவதையாக திகழ்ந்து வரும் ‘சமத்து’ சமந்தாவுக்கு இன்று தனது 32 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.  அவருக்கு நடிகர்,  நடிகைகள் , ரசிகர்கள்  வாழ்த்து தொிவித்து  ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனா்.