1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (11:39 IST)

மகனுடன் சென்ராயன் கொடுத்த போஸ்! இதுவரை வெளிவராத கியூட் புகைப்படம்!

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சென்ராயன். தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’ , ’ஆடுகளம்’, ‘மூடர் கூடம் என பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். பிறகு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றார்.


 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது தனக்கு குழந்தை இல்லை அதனால் அனாதை குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார் சென்றாயன். அதன் பின்னர் கமலும் கண்டிப்பாக உங்களுக்கு  குழந்தை பிறக்கும் என்று கூறியிருந்தார். கமல் சொன்ன வாக்கு பலித்தது போலவே சென்றாயன் மனைவி கருவுற்றார்.  
 
பிறகு கர்ப்பமாக இருந்த மனைவி கயல்விழி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ராயன் இருந்த போதுதான் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சொன்னார். 
 
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியயே வந்த சென்ராயன், மனைவி  சினேகாவின் தீவிர  ரசிகை என்பதால் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கர்ப்பமாக இருந்த கயல் விழியை சினேகாவின் வீட்டுக்கே அழைத்துச் சென்று சந்திக்க வைத்து ஆச்சர்யப்படுத்தினார். அதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 


 
இந்த நிலையில் தற்போது சென்ட்ராயன் தனது இரண்டு மாத குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.