1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (06:50 IST)

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நடிகர் சஞ்சீவ்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நடிகர் சஞ்சீவ்!
பிரபல தொலைக்காட்சி நடிகரும், தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
சென்னை லயோலா கல்லூரியில் விஜய் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் ஒன்றாக படித்தவர்கள். எனவே இருவரும் இன்றுவரை சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
நடிகர் சஞ்சீவ் மெட்டிஒலி, ஆனந்தம், கஸ்தூரி, திருமதி செல்வம், ரேகா ஐபிஎஸ் உள்பட பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் ஒரு சிலர் விஜய் நடித்த ஒரு சில படங்கள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சமீபத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் சஞ்சீவ் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று சஞ்சீவ் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்