திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (08:24 IST)

பிறந்த நாள் மெழுகுவர்த்தியை ஊதியபோது நடிகையின் முடியில் தீ: அதிர்ச்சி தகவல்

பிறந்த நாள் மெழுகுவர்த்தியை ஊதியபோது நடிகையின் முடியில் தீ: அதிர்ச்சி தகவல்
பிறந்தநாள் மெழுகுவர்த்தியை ஊதிய போது நடிகையின் தலைமுடியில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரபல அமெரிக்க நடிகை நிக்கோல் ரிச்சி. இவர் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நடிகை நிக்கோல் ரிச்சி தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடிகை நிக்கோல் ஏற்றப்பட்ட ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தியை ஊதினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது தலை முடிகளில் தீ பற்றியது.
 
இதனையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் நடிகையின் முடி சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு காயம் ஏதும் இல்லை என்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தியாகும். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.