திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (21:52 IST)

வைபவ் ஜோடியாகிறார் ஹன்சிகா

வைபவ் நடிக்க இருக்கும் ‘காட்டேரி’ படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா.
விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா. ஆனால், அவருக்கு  நடிக்கத் தெரியாததால், சில வருடங்களிலேயே சினிமாவில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். ஹன்சிகாவை தமிழில் அறிமுகப்படுத்திய பிரபுதேவா மட்டும் அவருக்கு ஆதரவு கொடுத்து, தனக்கு ஜோடியாக ‘குலேபகாவலி’ படத்தில் நடிக்க  வைத்திருக்கிறார்.
 
முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி போடுவேன் என்று வீராப்பாக இருந்த ஹன்சிகா, வேறு வழியில்லாமல் தற்போது இரண்டாம்கட்ட ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறார். சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க  கமிட்டாகியுள்ள ஹன்சிகா, தற்போது வைபவ் ஜோடியாக ‘காட்டேரி’ படத்தில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார். டீகே இயக்கும்  இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.