செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2017 (09:32 IST)

ஆர்யாவுக்காக த்ரிஷாவும், ஹன்சிகாவும் என்ன பண்ணாங்க தெரியுமா?

ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் போஸ்டரை, நடிகைகள் த்ரிஷா மற்றும் ஹன்சிகா இருவரும் தங்களுடைய  ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
‘ஹர ஹர மஹாதேவஹி’ படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார், தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’  என்ற படத்தை இயக்கி வருகிறார். கெளதம் கார்த்திக் மற்றும் வைபவி ஷாண்டில்யா இருவரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
 
இதைத் தொடர்ந்து, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தை இயக்குகிறார் சந்தோஷ். இந்தப் படத்தில் ஆர்யா ஜோடியாக  சயிஷா நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக், ஆர்யா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு  வெளியிடப்பட்டது.
 
இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது போஸ்டர், இன்று மாலை வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் ஆர்யாவுடன், சயிஷாவும் இருக்கிறார். இந்த போஸ்டரை நடிகைகள் த்ரிஷா மற்றும் ஹன்சிகா இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளனர்.