1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 டிசம்பர் 2017 (13:25 IST)

என்னது சந்தானத்துக்கு ஜோடி தீபிகா படுகோனாவா?

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் ரெடியாகி ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. சேதுராமன் இயக்கத்தில், சக்க போடு போடு ராஜா படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வெளியாக காத்திருக்கும் இந்த படத்தை  உடனே ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கிறார்கள். 
சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடியனாக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர். இவர் நடிப்பில் விரைவில் சக்க போடு  போடு ராஜா படம் திரைக்கு வருகின்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 6-ம் தேதி நடக்கவுள்ளது, இப்படத்திற்கு  நடிகர் சிம்பு தான் இசையமைத்துள்ளார்.
 
இந்நிலையில் சந்தானத்திடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்க, அதற்கு சந்தானம் ‘எனக்கு தீபிகா படுகோன் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும், அது  தான் என் விருப்பம்’ என்று கூறியுள்ளார். மேலும், பத்மாவதி படத்தை தடை செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை,  படம் திரைக்கு வந்த பிறகே கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.