வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (21:51 IST)

அஜித், விஜய்க்கு யார் ஜோடி? அடித்துக் கொள்ளும் ஹீரோயின்கள்

அஜித், விஜய்யின் அடுத்த படங்களில் ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்கள் அடித்துக் கொள்கிறார்களாம்.
‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களைத் தொடர்ந்து, அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ‘விசுவாசம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு  இசையமைக்கிறார்.
 
அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கும் இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விவேகம்’ படத்தைத்  தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அனுஷ்கா, இந்தப் படத்தில் ஹீரோயினாக  நடிப்பார் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கெனவே கெளதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் இணைந்து  நடித்துள்ளனர்.
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘விஜய் 62’ படத்தில் நடிக்கிறார் விஜய். ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் இது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்தப் படமும் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் என்கிறார்கள்.
 
கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாரா மற்றும் ரகுல் ப்ரீத்சிங் இருவர் பெயர்களும் அடிபடுகின்றன. சிலர், இருவருமே நடிக்கின்றனர் என்கிறார்கள். ஆனால், இந்த  ஹீரோயின்கள் யாருமே இன்னும் உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால், அந்த வாய்ப்புகளைக்  கைப்பற்றிக் கொள்ள மற்ற முன்னணி நடிகைகள் அடித்துக் கொள்கிறார்களாம்.