திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 22 மே 2021 (15:27 IST)

நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பாவை கொலை செய்தது இந்த அரசியல் பிரமுகரா?

நேர்காணல், பேட்டி என எல்லாவற்றிலும் சர்ச்சையான கருத்துக்களை கூறி சலசலப்பை ஏற்படுவது  எச் ராஜாவிற்கு ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய எச். ராஜா, ஜெயபிரகாஷ் என்ற ஜெயிலரை தற்போதைய பாபநாசம் எம்.எல்.ஏ கொலை செய்துவிட்டார். 
 
ஜெயபிரகாஷ் என்பவர்  நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை தான் என கூறி அதிசர்ச்சி அளிக்கும் வகையில் பேசினார். இந்த விவகாரம் சமூகவலைதளத்தங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பகிரப்பட்டு பேசப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்த தெளிவு ஒன்று கிடைத்துள்ளது. 

அதாவது சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் ஜெயபிரகாஷ் இல்லை ஜி.தாஸ். அதே போல் அவர் கொலை செய்யப்பட்டு மரணிக்கவில்லை. உடல்நலக்குறைவால் மரணமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. வம்பிற்குனா இப்படி பேசிவிட்டு ஏதேனும் விமர்சனத்திற்குள்ளாவதே எச். ராஜாவின் வேலை என இணையவாசிகள் வழக்கம் போல திட்டி வருகின்றனர்.