திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 15 மே 2021 (21:07 IST)

நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் கொரொனா தடுப்பு பணிக்கான  நிதியை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளனர்.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.


தற்போது, தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருவதால்  ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஒருநாளில் 30 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இத்தொற்றில் இருந்து மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என தமிழக அரசும் காவல்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு தாரளமான நிதி வழங்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், சமூக அமைப்புகள், பெருந்ந்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிடம்  வேண்டுகோள் விடுத்திருந்தார்
இந்நிலையில், இன்று அசுரன், பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை இயக்கிய வெற்றிமாறன் தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். அதேபோல் , நடிகர் ஜெயம் ரவி, தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
தற்போது தமிழ்சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். இவரது மனிதநேயத்திற்காக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.