1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (19:45 IST)

ஜிவி பிரகாஷின் ‘ஐங்கரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜிவி பிரகாஷ் நடித்த ஜெயில் மற்றும் பேச்சிலர் ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் தற்போது அவருடைய அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஜிவி பிரகாஷ் நடிப்பில் ரவி அரசு என்பவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஐங்கரன். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் முடிந்து பல ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
இந்த படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் ஜோடியாக மகிமா நம்பியார் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் ஒரு சில பிரச்சனை காரணமாக முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது இந்த படம் வெளியாக உள்ளது அடுத்து ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது