இந்த வாரத்தில் வலிமை ட்ரெய்லர் ரிலீஸ்? – ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர் இந்த வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு தடைகளை தாண்டி உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர், க்ளிம்ப்ஸ், சிங்கிள் என பலவும் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீண்ட நாளாக ரசிகர்கள் காத்திருக்கும் வலிமை படத்தின் ட்ரெய்லர் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து ரசிகர்கள் #VALIMAITrailerFeast என்ற ஹேஷ்டேகை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.