1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (19:48 IST)

ஒமிக்ரானால் கூடுதல் கட்டுப்பாடுகள்: ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘வலிமை’ திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’, திரைப்படம் மற்றும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் வலிமை ஆகிய திரைப்படங்கள் திட்டமிட்டபடி வெளிவருமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் பகல் நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் குறிப்பாக திரையரங்குகள் மால்கள் உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
எனவே ஜனவரி மாதம் வெளியாகும் வலிமை, ‘ஆர்.ஆர்.ஆர்.’, ராதேஷ்யாம் உள்பட ஒரு சில பெரிய திரைப்படங்கள் திட்டமிட்டபடி வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.