செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (12:23 IST)

’மை டியர் பூதம்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’மை டியர் பூதம்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபுதேவா நடித்து வரும் அடுத்த திரைப்படமான ’மை டியர் பூதம்’ என்ற படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
விமல் நடித்த மஞ்சப்பை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் மை டியர் பூதம். 
 
பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் வரும் மாயாஜால திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.