செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (09:29 IST)

கல்லூரி மாணவிக்கு உதவி செய்த ஜிவி பிரகாஷ்: நெட்டிசன்கள் பாராட்டு!

gvp
கல்லூரி மாணவிக்கு உதவி செய்த ஜிவி பிரகாஷ்: நெட்டிசன்கள் பாராட்டு!
கல்லூரி மாணவி ஒருவருக்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் உதவி செய்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
கும்பகோணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹேமப்பிரியா என்பவர் பிசிஏ படித்து வரும் நிலையில் அவர் தேர்வு கட்டணம் கட்ட முடியவில்லை என்றும் தேர்வு நாள் நெருங்கி விட்டதாகவும் டுவிட்டரில் தெரிவித்திருந்தார் 
 
இதனை பார்த்துவிட்டு உடனடியாக அந்த கல்லூரி மாணவியின்  வங்கி கணக்கிற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பணம் அனுப்பி உள்ளார். இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கல்லூரி தேர்வு கட்டணம் செலுத்த உதவிசெய்த ஜிவி பிரகாஷுக்கு கல்லூரி மாணவி ஹேமப்பிரியா தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தான் தேர்வு நன்றாக எழுத தனக்கு வாழ்த்து தெரிவிக்கும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் 
 
Edited by Siva