1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (14:29 IST)

காதல் தகராறில் கல்லூரி மாணவி அடித்துக் கொலை !

காரைக்குடி அருகே  காதல் தகராறு காரணமாக கல்லூரி மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடியில் உள்ள அழகப்பா கலை கல்லூரியில் கணிதவியல் 3 ஆம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி சினேகா. இவர், இலுப்பைக்குடி குடியிருப்பைச் சேர்ந்த சென்டிரிங் வேலை செய்து வரும் கண்ணன் என்பவரை 3 ஆண்டுகளாகக்   காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததை அடுத்து, கண்ணன், சினேகாவின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார்.

அதன்பின், சினேகா, கண்ணனிடம் பேசாமல் தவிர்த்துவந்துள்ளார்.  இந்த நிலைடில், சினேகா ரேசன் கடை அருகில் வந்தபோது, அவரை வழிமறித்த கண்ணன் அவரிடம் பேசியுள்ளார், அப்போது, சினேகா தன் டூவீலரில் செல்ல முயற்சித்தபோது, மறைத்து வைத்திருந்த சென்ட்டிங் கம்பியால் சினேகாவின் தலையில் பலமாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார் கண்ணான்.

இதுபற்றித் தகவல் அறிந்து, பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து சினேகாவை மீட்பதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்ணனை தேடி வருகின்றனர்.