செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (09:42 IST)

மின்னல் முரளியால் குரு சோமசுந்தரத்துக்கு குவியும் மலையாள பட வாய்ப்புகள்!

மின்னல் முரளியால் குரு சோமசுந்தரத்துக்கு குவியும் மலையாள பட வாய்ப்புகள்!
மின்னல் முரளி படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்த குரு சோமசுந்தரத்தின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழில் ஆரண்யகாண்டம், ஜிகர்தண்டா என ஆரம்பத்தில் கலக்கிய குரு சோமசுந்தரம், அதன் பின்னர் அவரின் திறமைக்கு ஏற்ற வேடங்கள் கிடைக்காமல் தடுமாறி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள மின்னல் முரளி படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதில் ஷிபு என்ற ஆண்ட்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.

அதன் பலனாக இப்போது மோகன் லால் இயக்கும் பர்ரோஸ் என்ற படத்தில் முக்கியமான வேடம் ஒன்றை மோகன் லால் கொடுத்துள்ளாராம்.