மலையாள சினிமாவையும் பாதித்த கதை திருட்டு!

Last Modified வியாழன், 14 அக்டோபர் 2021 (16:35 IST)

மலையாளத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படம் இப்போது தமிழிலும் ரீமேக் ஆகி வருகிறது.

கடந்த சில காலமாக தமிழ் சினிமாவில் கதைத் திருட்டு பஞ்சாயத்துகள் அதிகமாக நடந்துவருகின்றன. அதற்கான தீர்வுகள் திரைமறைவிலும் நீதிமன்றங்களிலும் நடந்து ரசிகர்களின் பார்வைக்கே வந்தன. இதனால் இப்போது எந்த திரைப்படம் உருவானாலும் கடைசி நேரத்தில் கதை திருட்டு பிரச்சனை வருமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் இப்போது ஏற்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் கேரள அரசின் விருதுகளையும் பெற்றது. இந்நிலையில் இப்போது அந்த படம் ஒரு ஆங்கில படத்தின் காப்பி என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. இது சம்மந்தமாக கேரள அரசின் கலாச்சாரத்துறைக்கு சம்மந்தப்பட்டவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :