வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 4 அக்டோபர் 2021 (15:47 IST)

மலையாள சினிமாவில் கால்பதிக்கும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்.. முதல் படமே சூப்பர் ஸ்டார் படம்!

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ப்ரோ டாடி படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இந்நிலையில் இப்போது லாக்டவுன் சமயத்தில் மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.
இந்த படத்துக்கு ப்ரோ டாடி என பெயர் வைக்கப்பட்ட நிலையில் இப்போது படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி முடித்துவிட்டனர். இந்நிலையில் இந்த படத்தையும் ஓடிடியிலேயே வெளியிட உள்ளனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்த படத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் மூலம் மலையாளத்திலும் டிஸ்னி நிறுவனம் கால்பதிக்கிறது.