செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 29 அக்டோபர் 2021 (13:11 IST)

கேரளா திரையரங்குகள் திறப்பு… முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கேரளாவில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் திரையரங்குகள் இதுவரை திறக்கப்படாமல் இருந்த நிலையில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. படம்பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒன்றரை ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த முன்னணி மலையாள நடிகர்களின் படங்கள் இப்போது வரிசையாக ரிலீஸ் தேதிகளை அறிவித்து வருகின்றன. மோகன்லால், பிருத்விராஜ், மம்மூட்டி உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டு வருகின்றது.