கமல்-லோகேஷ் படத்தின் டைட்டில்: 40 ஆண்டுக்கு முன் கமலே நடித்த டைட்டில் தான்!

kamal lokesh
கமல்-லோகேஷ் படத்தின் டைட்டில்
siva| Last Modified வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (08:30 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் திரைப்படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த திரைப்படத்திற்கு பலரும் ’எவனென்று நினைத்தாய்’ என்பதுதான் டைட்டில் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவினர் ஏற்கனவே இது டைட்டில் அல்ல என்றும் இப்போதைக்கு கமல் 232 என்று அழைக்கப்படும் என்றும் இந்த படத்தின் உண்மையான டைட்டில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்தனர்
மேலும்
’எவனென்று நினைத்தாய்’என்பது வெறும் ஹேஷ்டேக் தான் என்றும் டைட்டில் அல்ல என்றும் படக்குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில் அப்படி என்றால் இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து கமல் ரசிகர்கள் இடையே கேள்வி எழுந்தது

நமக்கு கிடைத்த தகவலின்படி இந்த படத்தின் டைட்டில் ’குரு’ என்று வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது கடந்த 1980ஆம் ஆண்டு ஐவி சசி இயக்கத்தில் கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடித்த திரைப்படம் ’குரு’.40 ஆண்டுகளுக்குப் பின்னர் கமலஹாசன் மீண்டும் தனது படத்தின் டைட்டிலையே அவரது படத்திற்கு வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது


இதில் மேலும் படிக்கவும் :