புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (13:15 IST)

பிக்பாஸில் யூட்யூப் பிரபலம் ஜி.பி.முத்து!? – நடிகர் சதீஷ் செய்த எச்சரிக்கை!

பிரபல டிக்டாக், யூட்யூப் பிரபலம் ஜி.பி.முத்து பிக்பாஸில் இணைந்திருப்பதாக வெளியாகியுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டு ஷோ பிக்பாஸ். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் சின்ன ப்ரோமோவும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் பிக்பாஸ் 5வது சீசனில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் யூட்யூப் பிரபலம் ஜி.பி.முத்து பிக்பாஸ் ஷெட் அருகே நின்று எடுத்துள்ளதாக ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள நடிகர் சதீஷ் “உள்ள டாஸ்க் லெட்டர மட்டும் அவர்கிட்ட குடுத்துடாதீங்க.. செத்த பயலுவலா.. நார பயலுவலா” என்று பதிவிட்டுள்ளார்.