வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 அக்டோபர் 2018 (12:49 IST)

கருணாநிதிக்கு தெரியும் ஸ்டாலின் தலைமைக்கு ஏற்றவரா என்று?

கருணாநிதிக்கு தெரியும் ஸ்டாலின் தலைமைக்கு ஏற்றவரா என்று?
ஸ்டாலின் தலைவர் பதவிக்கு சரியானவர் இல்லை என்பதால்தான் கருணாநிதி அவருக்கு தலைமை பதவி வழங்கவில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். 
 
முதலவர் கூறியது பின்வருமாறு, சாதாரண தொண்டனாக இருந்த நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு அதிமுகவில் உள்ள ஜனநாயகமே காரணம். 
 
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஓபிஎஸ்ஸை முதலமைச்சராக்கி அழகு பார்த்தார். ஆனால், திமுகவில் கருணாநிதி உயிருடன் இருந்தவரை ஸ்டாலினைத் தலைவராக்கவில்லை. அவருடைய அப்பாவே அவரை தலைவராக்கவில்லை. நாட்டு மக்கள் எப்படி அவரை ஏற்றுக்கொள்வார்கள். 
 
ஸ்டாலின் தலைவர் பதவிக்கு சரியானவர் அல்ல என்பதால்தான் ஸ்டாலினை கருணாநிதி தலைவராக்கவில்லை என்று விமர்சித்துள்ளார். 
 
மேலும், திமுகவில் தலைவராக கருணாநிதி இருந்தார். இப்போது ஸ்டாலின் இருக்கிறார். புதிதாக உதயநிதி வந்து புகுந்துள்ளார். அது கட்சியல்ல அதனை கம்பெனி. ஆனால், அதிமுகவில் அப்படியல்ல எனவும் குறிப்பிட்டார்.