வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 19 அக்டோபர் 2024 (13:42 IST)

GOAT படம் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக வசூல் செய்தது எவ்வளவு?.. லியோவை முந்தியதா?

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படம்  ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்றாலும் வசூலில் கலக்கியது. திரையரங்குகள் மூலமாக சுமார் 455 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் பெரியளவில் வசூலித்தாலும் படத்தின் மீது ஏராளமான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. அதில் முக்கியமானது படம் பல படங்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான்.

இந்நிலையில் கோட் படம் தற்போது தன்னுடைய திரையரங்க காலத்தை முடித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் கோட் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 217 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் முந்தைய படமான லியோவின் வசூலை விட இது 15 கோடி ரூபாய் குறைவு என்று சொல்லப்படுகிறது.