1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (09:22 IST)

“கீழ இருக்குறவன் மேல வரக்கூடாதுன்னா… நீங்க கைவைக்குறது கல்விலதான?” –விமலின் ‘சார்’ பட புதிய டிரைலர்!

நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் கன்னிமாடம் திரைப்படத்துக்குப் பிறகு விமல் கதாநாயகனாக நடிக்கும் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ்ரூட் புரொடக்‌ஷன் நிறுவனம் வழங்குகிறது.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார்.

பள்ளிக்கூட வாத்தியாராக செல்லும் விமல், மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்படும் பிரச்சனைகளும் அதை எதிர்த்து அவர் போராடுவதும் கதையாக இருக்கும் என்பதை இந்த டிரைலர் கோடிட்டு காட்டுகிறது. முற்போக்குக் கருத்துகளைக் கூறும் படமாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு முதலில் ‘ம பொ சி’ எனப் பெயர் வைக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது.

இந்த படம் அக்டோபர் 18 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது புதிய டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. முந்தைய டிரைலரைப் போலவே இதுவும் கல்விக்கான போராட்டத்தை சொல்லும் படமாக சார் உருவாகி வருவதைக் கோடிட்டு காட்டுகிறது.