வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 17 அக்டோபர் 2024 (11:57 IST)

மழை பெய்யாமல் இருக்க அகல் விளக்கேற்றி வழிபட்ட விஜய் கட்சி தொண்டர்..!

அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், அன்றைய தினம் மழை வரக்கூடாது என்பதற்காக அகல் விளக்கு ஏற்றி, தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர் ஒருவர் பிரார்த்தனை செய்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள இடத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், குறிப்பாக வாகனங்களை நிறுத்த சாலையின் இருபுறமும் தனியார் நிலம் தேர்வு செய்யப்பட்டு, வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து அக்டோபர் 27ஆம் தேதி மழை வரக்கூடாது என்பதற்காக, பாண்டியன் என்ற 36 வயது தவெக தொண்டர், மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து அகல் விளக்குடன் அகல் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்தார். அப்போது, அவரது மகன்களும் உடன் இருந்தனர் என்பதை பிற்படுத்தக்காதே.

இது குறித்து பாண்டியன் கூறிய போது, "தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு மழையால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, மாநாடு நடைபெறும் வரை மழை வரக்கூடாது என்பதற்காக பிரார்த்தனை செய்தேன்" என்று கூறியுள்ளார்.


Edited by Siva