1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 19 அக்டோபர் 2024 (07:54 IST)

விஜய் 69 ஆவது படத்துக்குப் பிறகு நடித்தால் அது எங்கள் படமாக இருக்கும் – ஜீவா அளித்த பதில்!

கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர், விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு விஜய் அரசியலில் முழுக் கவனம் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் ஜீவா “விஜய் ஹெச் வினோத் படத்துக்குப் பிறகு நடித்தால் அது எங்கள் நிறுவன படமாக இருக்கும். சூப்பர் குட் பிலிம்ஸின் 100 ஆவது படமாக அது இருக்கும்” எனக் கூறியுள்ளார். விஜய் அரசியலுக்கு சென்றாலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. அதனால் அவர் சினிமாவுக்கு மீண்டும் திரும்பி வருவார் என்று பலரும் பேசி வருகின்றனர்.