ஓட்டுக்குப் பணம் கொடுத்துட்டு ? சம்பாதிப்பாரா ? நல்லது செய்வாரா ? - வெங்கட் பிரபு வீடியோ

venkat prabhu
Last Updated: புதன், 17 ஏப்ரல் 2019 (20:28 IST)
நேற்றுடன் தமிழகத்தில் பிரசாரம் ஓய்ந்துவிட்டது. இன்றும் கூட பல கோடி ரூபாய் பணத்தை மக்களுக்குக் கொடுத்து ஓட்டுக்குப் பணம் வழங்க பல கட்சியினர் பதுக்கி வைத்திருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இதுபற்றி இயக்குநர் வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அதில் அவர் கூறியுள்ளதாவது :
 
நாம் போடுகிற ஓட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் சாப்பாடு, காற்று நீர் போன்றவற்றை நிர்ணயிக்கப் போகிறது.
 
வெறும் ஆயிரம் இரண்டாயிரம் என்  லட்ச ரூபாய் பணம் கொடுத்தாலும் பணத்தை வாங்க வேண்டாம். உங்களிடம் காசு கொடுத்து ஓட்டு வாங்குகிறவர் உங்களுக்கு நல்லது செய்வாரா அல்லது அவர் சம்பாதிப்பார என்று கேள்வி எழுப்பினார்.
 
நீங்கள் நோட்டாவிற்கு ஓட்டு போட்டால் நோட்டாவிற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும்.
 
ஒரு படம் பார்கிற போது ரிவியூ பார்த்து படம் பார்க்கும் நாம், தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை அறிந்துகொள்ள ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை ?
 
யார் என்ன சொன்னாலும் அதில் என்ன உண்மை உள்ளது என்ன பொய் உள்ளது என்று  தெரிந்து ஓட்டுப்போட வேண்டும்  என்று அவர்  தெரிவித்துள்ளார்.
 இதில் மேலும் படிக்கவும் :