1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (09:01 IST)

கைப்பற்றப்பட்ட ரூ.1.50 கோடி பணம் அதிமுகவுக்கு சொந்தமானது: அமமுக வேட்பாளர் திடீர் பல்டி!

நேற்று அமமுக அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் காவல்துறையினர்களின் உதவியுடன் சோதனை செய்தபோது ரூ.1.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. இதுகுறித்து அமமுகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது
 
இந்த நிலையில் ஆண்டிபட்டியில்   தேர்தல் அதிகாரிகளால்  கைப்பற்றப்பட்ட ரூ.1.50 கோடி பணம் அதிமுகவுக்கு சொந்தமானது என்றும், அதிமுகவுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக நாங்கள்தான் தகவல் தந்தோம் என்றும், ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
மேலும் அதிமுகவை காப்பாற்றுவதற்காக அமமுகவின் பணம் என பொய்யாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டுவதாகவும், காவல்துறையினர் வானத்தை நோக்கி சுட்டதாக கூறுவது பொய் என்றும், வானத்தை நோக்கி சுடாமல் எங்களை அச்சுறுத்த டம்மி புல்லட் மூலம் வணிகவளாகத்திலேயே சுட்டனர் என்றும் அமமுக வேட்பாளர் கூறியுள்ளார். இவருடைய பேட்டியால் உண்மையில் கைப்பற்றப்பட்ட ரூ.1.5 பணம் யாருடையது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது