திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (19:26 IST)

’விக்ரம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தான்: லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்றுமுன் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’விக்ரம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் கிருஷ் கங்காதரன் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. க்ரிஷ் கங்காதரன் தான் தளபதி விஜய் நடித்த சர்கார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார் என்பதும் அந்த படம் ஒளிப்பதிவிற்காக மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்வதற்காக கிருஷ் கங்காதரனுக்கு மிகப் பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதி வாரத்தில் தொடங்கும் என்றும் ஒரே கட்டத்தில் இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது