திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2017 (15:52 IST)

உங்களை எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு: கலாய்க்கும் காயத்ரி ரகுராம்!

உங்களை எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு: கலாய்க்கும் காயத்ரி ரகுராம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்வர்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட, சர்ச்சையான நபராக மாறிய காயத்ரி ரகுராமுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு நிலவியது. இதனால் காயத்ரி ரகுராம் குறித்து மீம்ஸ்கள் அதிகமாக வந்தது.


 
 
காயத்ரி ரகுராம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் அவர் மீதான தனிப்பட்ட விமர்சன தாக்குதல் நீடித்தவாறே இருந்தது. அவரது டுவிட்டர் பக்கத்தை பலரும் சூழ்ந்துகொண்டு காயத்ரி ரகுராமை திட்டி தீர்த்தனர்.
 
இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னை விமர்சிப்பவர்கள், கலாய்ப்பார்கள், மீம்ஸ் போட்டு கிண்டலடிப்பவர்கள் என அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
 
அதில், இந்த சுதந்திரமான உலகில் அனைவருக்கும் பேசுவதற்கு, உணர்வுகளை பகிர, எழுது, மீம்ஸ் போட, விமர்சிக்க உரிமை இல்லை. நான் அறிவுறை கூறவில்லை, உணமையை கூறுகிறேன். எனது டுவிட்டுகளை பார்த்து கோபமடைபவர்கள் என்னை டுவிட்டரில் பின்தொடராமல், உங்களுக்கு பிடித்த ரோல்மாடல்களை பின் தொடருங்கள்.


 

 
எனக்கு விரக்தியோ, கோபமோ இல்லை, என்னை கலாய்த்து உங்களின் நேரத்தை வீணடிக்கிறீர்களே என்ற கவலை தான் உள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை பார்க்க முடிகிறது. பிடிக்காதவர்களை பற்றி பேசுவது நீங்கள் எவ்வளவு வெட்டியாக உள்ளீர்கள் என்பதை காட்டுகிறது. கிண்டலுக்கு முடிவே இல்லை என கூறியுள்ளார்.