சுந்தர்.சி படத்தை ரீமேக் செய்யும் பி.வாசு?
சுந்தர்.சி இயக்கிய படத்தை, கன்னடத்தில் பி.வாசு ரீமேக் செய்யப் போகிறார் என்கிறார்கள்.
சுந்தர்.சி இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் படம் ‘அரண்மனை’. ஹன்சிகா, வினய், ஆன்ட்ரியா, சந்தானம், கோவை சரளா ஆகியோரோடு, சுந்தர்.சி.யும் இந்தப் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம், கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
கன்னடத்தின் பிரபல தயாரிப்பாளரான ரமேஷ் யாதவ், இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார். ‘ஆப்தமித்ரா 2’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை, பிரபல இயக்குநரான பி.வாசு இயக்கலாம் என்று கூறப்படுகிறது. கன்னட ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் சில மாறுதல்களும் இருக்கலாம் என்கிறார்கள்.