1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (15:36 IST)

லால் சலாம் படத்தில் கபில்தேவ் நடிப்பதை உறுதி செய்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் பின்னர் திருவண்ணாமலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடந்தது. படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார்.

இப்போது படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வரும் நிலையில் ரஜினி சம்மந்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. மேலதிக தகவலாக இந்த படத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை உறுதி செய்வது போல ரஜினியும் கபில்தேவ்வும் ஒன்றாக இருக்கும் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதுபற்றி பதிவிட்டுள்ள ரஜினிகாந்த் “முதன்முறையாக உலகக் கோப்பை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய மரியாதைக்குரிய, அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகவும், கவுரவுமாகவும் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.